News August 2, 2024
பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்!

சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமடைந்தார் . மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி ஜெயசித்ராவின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும்
Similar News
News November 4, 2025
புதுகை: கணவன் விஷம் அருந்தி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (60). இவருக்கு திருமணமாகி 30 வருடம் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் அவர் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று கைக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் வல்லத்ராக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
புதுகை: பெண்ணுக்கு கத்திக்குத்து!

வேப்பங்குடியைச் சேர்ந்தவர் குமரேசன் (33), இவரது மனைவி ராதா (39). குடும்ப தகராறில் ராதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த இருவருக்கும் தகராறு ஏற்பட குமரேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராதாவை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் குமரேசனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
News November 4, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


