News October 23, 2024
பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை

ஊத்தங்கரை அண்ணா நகரை சேர்ந்த இராமாயி (40), சிவக்குமார் (30) ஆகிய இருவரும் ஊத்தங்கரை நேருநகரில் திருமணம் செய்துகொள்ளாமல் 8 வருட காலம் குடும்பம் நடத்தி நடத்தி வந்துள்ளார். இராமாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவகுமார் 18.05.2018-ம் தேதி இராமாயி என்பவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் நேற்று மகிளா கோர்ட் சிவக்குமாருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.
Similar News
News December 22, 2025
கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!

கிருஷ்ணகிரி அம்மன் நகரில், தனியாக இருந்த லாரி டிரைவர் மனைவி விஜயலட்சுமியிடம் 51, முகமூடி அணிந்த மர்ம நபர் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். விஜயலட்சுமி கூச்சலிடுவதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
News December 22, 2025
கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்

தமிழக முதல் அமைச்சரின் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் டிச-20 கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 70 தூய்மை பணியாளர்களுக்கு சோதனை அடிப்படையில் காலை சிற்றுண்டி உணவு தயார் செய்யப்பட்டு பணிகளை செய்து வந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கி, காலை சிற்றுண்டியை வழங்கினார்.
News December 22, 2025
கிருஷ்ணகிரியில் குறைதீர்க்கும் முகாம் துவக்கம்!

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் வளாகத்திலுள்ள, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.22) முதல் ஜனவரி.3ம் தேதி வரை சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு காலை 10மணி – மாலை 6மணி வரை நடைபெறும். மேலும், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்களின் புகார்கள் சந்தேகங்களுக்கு இந்த முகாமினை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


