News April 16, 2025
பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிடர்கள் கைது

சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
Similar News
News December 5, 2025
கிருஷ்ணகிரியில் 150 பணியிடங்கள்; உடனே APPLY பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள 150 சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. உரிய விண்ணப்பத்தை நிறைவு செய்து தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்துக்கு 17.12.2025 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் IT.
News December 5, 2025
ஓசூர்: கண் இமைக்கும் நேரத்தில் திருட்டு.. ஒருவர் கைது

ஓசூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள டைட்டான் வாட்ச் ஷோரூம் இன் தங்கத்தால் ஆன வாட்ச் ஒன்று திருட்டுப் போனதாக தகவல் தெரிந்த நிலையில் அக்கடையில் உள்ள கேமராவில் காவலர்கள் சோதனை செய்தபோது சூடுகொண்டபள்ளியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திருடி சென்றது தெரிந்து அவரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரித்ததில் திருடியது உறுதி செய்து அவரிடமிருந்து வாட்ச்சை கைப்பற்றி ஷோரூமில் ஒப்படைத்தனர்.
News December 5, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


