News March 19, 2024
பெண்ணிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

மேற்கு தாம்பரம், கன்னடப்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரிடம் கடந்த 12ஆம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர்கள் பஜாஜ் பைனான்சில் இருந்து பேசுவதாகவும், ரூ. 4 லட்சம் லோன் தருவதாகவும், இதற்காக உரிய ஆவணம் மற்றும் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய திவ்யா ரூ.85,000 பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா நேற்று தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
செங்கல்பட்டு: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை

செங்கல்பட்டு மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
செங்கல்பட்டு: விமான நிலையத்தில் இலவச அனுமதி நேரம் அதிகரிப்பு

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் (PRM), பயணிகளை இறக்கி விட அல்லது ஏற்றிச் செல்ல வாகனங்களில் வருவோருக்கு 10 நிமிட இலவச அனுமதி தற்போது 15 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இது வருகை மற்றும் புறப்பாடு என இரு பகுதிகளும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கான பாஸ் விமான நிலைய நுழைவு வாயிலில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 21, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


