News September 15, 2024
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வங்கி அலுவலர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் விவசாய கடன் வழங்கும் பிரிவில் அலுவலராக பணி புரிந்து வந்தார். இவர் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவரிடம், விவசாய கடன் கொடுப்பது சம்பந்தமாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில் கார்த்திகேயனை போலீசார் நேற்று (செப்.14) கைது செய்தனர்
Similar News
News October 30, 2025
தேனி: குடும்பத் தகராறில் பறிபோன உயிர்

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தக் குடும்ப பிரச்சனையின் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த மாரியப்பன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (அக்.28) பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News October 30, 2025
தேனி: குடும்பத் தகராறில் ஒருவர் தற்கொலை

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தக் குடும்ப பிரச்சனையின் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த மாரியப்பன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (அக்.28) பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News October 29, 2025
தேனி வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு

தேனி மாவட்ட வைகை அணையில் இருந்து, மதுரை, திண்டுக்கல் செல்லும் 58 கிராம கிட்ட கால்வாயில் 300 மி.கா அடி தண்ணீரை நீர் இருப்பு மற்றும் நீர்வாகத்தினை பொறுத்து தேவைக்கேற்ப 29.11.25 முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆகியோர் திறந்து வைத்தனர்.