News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 15, 2025
வேலூர்: நகைக்கடையில் கைவரிசை – 3 ஆண்டுகள் சிறை!

வேலூர்: தோட்டப்பாளையத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் வளையல்களை திருடி சென்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பானுமதி (39), அமராவதி (48) ஆகியோரை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று (நவ.15) ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. இதில் பானுமதி, அமராவதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
வேலூர்: போக்சோ வழக்கு – கோர்ட் அதிரடி தீர்ப்பு!

வேலூர்: கடந்த 2018ம் ஆண்டு வேலூர் வடக்கு போலீஸாரால் முஸ்கான் என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நேற்று (நவ.14) வேலூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு முஸ்கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News November 15, 2025
வேலூரில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.15) நடத்த உள்ளது. முகாமில் 100க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 10,000 இடங்களுக்கு பணி வாய்ப்பை ஏற்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.


