News May 7, 2025

பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பேச்சு பயிற்சி

image

ஜாமியா கல்வி அறக்கட்டளை மற்றும் சேலம் முஸ்லிம் கல்வி சங்கம் சார்பில் அனைத்து சமுதாய பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பேச்சு பயிற்சி மே 01- ஆம் தேதி சேலம் கோட்டை ஸ்டோக்ஸ் ஹாலில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 63826-67729, 94432-17286 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

Similar News

News November 21, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகராட்சியில் இன்று (21.11.2025)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

News November 21, 2025

மெட்ரோ திட்ட அறிக்கை திமுகவின் கவனக்குறைவு: இபிஎஸ்

image

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள்தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தார் ஒப்புதல் கிடைத்திருக்குமே என்றார்.

News November 21, 2025

சேலம்: செல்போன் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!

image

சேலம், பூலாம்பட்டியை அடுத்த பில்லுக்குறிச்சி காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது விஷ்ணு, பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இரவு, பகல் பாராமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அவரை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!