News April 5, 2025

பெண்களுக்கான இலவச எலக்ட்ரிக் ஆட்டோ பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி தகுதி: 8ம் வகுப்பு, வயது: 18 முதல் 40வயது வரை உள்ள பெண்கள். மாதம் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானத்தில், 100% வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, வரும் 16/04/25 தேதி கடைசி நாள். தொடர்புக்கு: 8903363396

Similar News

News October 31, 2025

திருச்சி மாவட்டம் சாதனை!

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறையினர், கல்லுாரிக்கனவு உள்ளிட்ட திட்டங்கள் மூலமான எடுத்த தொடர் நடவடிக்கைகளால், திருச்சி மாவட்டத்தில் 2024–25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த 11,064 அரசு பள்ளி மாணவர்களில், 10,864 பேர் (98 சதவீதம்) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

திருச்சி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 31, 2025

திருச்சி: மகளை சீரழித்த கொடூர தந்தை கைது

image

துவாக்குடியைச் சேர்ந்தவர் விஸ்வா (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில மாதங்களளாக மனைவியை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மகளை இவர் மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் விஸ்வாவை போக்சோவின் கீழ் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!