News April 30, 2025
பெங்களூரு வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி, அலங்காரப் பொருள்கள் வியாபாரியான திலீப் என்பவரை காரில் கடத்தி அடித்து கொலை செய்து உடலை புதைத்த வழக்கில் தேனி காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் திலீப்பை காரில் கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன்(30) என்பவரை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்தனர்.
Similar News
News April 30, 2025
தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Helper(பெண்), Night Watchman(ஆண்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 2 காலிபணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 30-04-2025 முதல் 07-05-2025 வரை. தகுதியான நபர்களுக்கு Rs.4,500 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு விண்ணபிக்க 8ம் வகுப்பு தேர்ச்சியும் 42வயது மிகாமல் இருத்தல் அவசியம். <
News April 29, 2025
தேனி : முதிர்வு தொகை பெற அரிய வாய்ப்பு

தேனி மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை பெறுவதற்கு தகுதியான கண்டறிய இயலாத 589 பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் https://theni.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களது உரிய ஆவணங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்து பயன் பெறலாம்.
News April 29, 2025
தேனி பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

தேனி மாவட்ட பெண்களே பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி
▶️ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04546-244431.
▶️தேனி – 0456-254090.
▶️ உத்தமபாளையம் -0456-268230.
▶️ போடி – 0456 – 285700.
இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.