News April 19, 2025
பெங்களூரு-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06585) இன்று 19-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
Similar News
News January 9, 2026
கெங்கவல்லியில் காதல் ஜோடி தஞ்சம்!

கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் லோகநாதன் (25) கூலிதொழிலாளி. ஆத்துாரை சேர்ந்த ஜனனி (19) கல்லுாரி படிக்கிறார். இருவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டு நேற்று கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்த போலீசார் பேச்சு நடத்தி லோகநாதனுடன், ஜனனியை அனுப்பினர்.
News January 9, 2026
சேலம்: ரயிலில் அடிபட்டு 377 பேர் பலி! அதிர்ச்சி தகவல்

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு இடங்களில் ரயிலில் சிக்கி 377 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் சேலத்தில் 132 பேரும், ஜோலார்பேட்டையில் 125 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர். காட்பாடி: 82, ஓசூர்: 20, தர்மபுரி: 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
News January 9, 2026
சேலம் மாநகரில் ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் நேற்று (ஜன.08) இரவு முதல் இன்று காலை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


