News January 22, 2025
பெங்களூருவில் தமிழக பெண்ணுக்கு நடந்த அவலம்

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி இரவு கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
கிருஷ்ணகிரி: மாணவர்களே இதை மிஸ் பண்ணாதீங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற நவ.15 ஆகும். அனைத்து மாணவ மாணவிகளும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
கிருஷ்ணகிரி: இந்த தொகுதியை விடக்கூடாது-ஸ்டாலின் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில்,திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுகவின் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதி திமுகவும் சவாலாக இருக்கும் என கூறினார். அந்த தொகுதியை எந்த எதிர்க்கட்சியும் இழக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓசூர், வேப்பனஹள்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறாவிட்டால், மாவட்ட செயலாளர் பதவி நீக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


