News October 24, 2024
பெங்களூரில் இருந்து மதுரை வந்த விமானம் தரையிறக்கம்

அதிக காற்றழுத்தம் மற்றும் மேகமூட்டம் காரணமாகவும் மழைப்பொழிவு இருப்பதால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என அதிகாரிகள் தகவல். சிறிது நேரத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பெங்களூர் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் சென்னை விமானம் சிறிது நேரத்தில் தரையிறக்கப்பட்டது.
Similar News
News November 6, 2025
மதுரை: மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு

பேரையூர் அருகே உள்ள மேலக்காடனேரி இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜா 64 இவர் கடந்த மாதம் 3ம் தேதி தெருவில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற பசு மாடு திடீரென அவரை இடித்து கீழே தள்ளியது. சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜா உயிரிழந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 6, 2025
மதுரை: வைகை ஆற்றில் லோடுமேன் உடல் மீட்பு

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் ராஜா மகன் சந்தோஷ் 18 லாரி கம்பெனி லோடுமேன். இவர் நேற்று முன்தினம் மதியம் பவர் ஹவுஸ் பகுதி வைகை ஆற்றில் குளித்த போது மூழ்கினார் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடினர், பின்னர் துவரிமான் அருகே சந்தோஷ் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 6, 2025
மதுரை: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை <


