News November 14, 2024
பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு
இன்றும், நாளையும் சுபமுகூர்த்த நாட்கள் என்பதாலும், பூக்களின் வரத்து குறைவாலும் நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,850 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது. இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.100, ரோஜாப்பூ ரூ.100, முல்லை பூ ரூ.650, ஜாதி பூ ரூ.500, கனகாம்பரம் ரூ.1,000, கோழிக்கொண்டை ரூ.70, செண்டுமல்லி ரூ.60-க்கு விற்பனையாகிறது.
Similar News
News November 19, 2024
சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் இலவச அனுமதி
திண்டுக்கல் என்றவுடன் ஞாபகம் வருவது கமகமக்கும் பிரியாணியும், பூட்டும் மட்டுமல்ல மலைக்க வைக்கும் மலைக்கோட்டையும் தான். இந்நிலையில் இன்று உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் நகரை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் மாலை நேரத்தில் குவிந்தனர்.
News November 19, 2024
திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்.
News November 19, 2024
திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (KYC Update செய்ய வேண்டும் என வரும் போலியான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.