News April 19, 2025
பூமாதேவியின் சினத்தை தணித்த பூமிபாலகர் ஆலயம்

மகாவிஷ்ணு லட்சுமியுடன் தாமிரபரணி நதிக்கரையில் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட நாரதர் பூமாதேவியிடம் கலகம் மூட்ட உடனே பூமாதேவி பாதாள உலகில் மறைய உலகம் நீரின்றி வறண்டது. இதை கண்டு அஞ்சிய தேவர்கள் திருமாலிடம் முறையிட திருமால் பூமாதேவியை சமாதானம் செய்து திருமகளும், நீயும் சமமானவர்களே எனக்கூற பூமாதேவியும் தவறை உணர்ந்தார். பூமிதேவியின் சினத்தை தணித்ததால் பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் திருநாமம் பெற்றார்.
Similar News
News December 23, 2025
தூத்துக்குடியில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைத்துள்ளது. இதனைக் கண்டித்து வரும் 24-ம் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், காயாமொழி உள்ளிட்ட 20 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
தூத்துக்குடி: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.
News December 22, 2025
தூத்துக்குடி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.


