News October 23, 2024
பூந்தமல்லி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சி அமைந்துள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் பணம் கை மாறுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் அடங்கிய 15 போலீசார் இன்று மாலை முதல் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அலுவலகத்தின் நுழைவு கேட்டை மூடி விட்டு யாரும் உள்ளே வந்து செல்லாத வகையில் சோதனை நடக்கிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
திருவள்ளூர்: பூட்டிய வீட்டில் அக்காள்-தங்கை பிணமாக மீட்பு

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் ராமமூர்த்தி நகரில் வசித்து வந்த வர்கள் ரமணி(50), ரேகா(43). அக்காள்-தங்கையான இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவர்கள் வசித்து வந்த வீடு 3 மாதங்களாக தீர்க்கப்படாமல் இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் நேற்று பூட்டை உடைத்து திறந்த பார்த்தபோது இருவரும் எலும்பு கூடாக கிடந்துள்ளார். சோழவரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
SUNDAY SPECIAL: திருவள்ளூர்- இங்கே போக மிஸ் பண்ணிடாதீங்க!

திருவள்ளூரில் உள்ள சிவன் கோயில்கள் பட்டியல்
▶பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
▶ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
▶கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
▶நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
▶திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
▶திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில்
▶பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில்
▶பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில்
▶மாதர்பாக்கம் அஞ்சல் காசி விஸ்வநாதர் கோயில். ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


