News April 19, 2025
பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News July 7, 2025
கழுகு பார்வையில் திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று இரவே வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் பக்தர்களின் அலைகளால் காட்சியளிக்கின்றன. இதோ திருச்செந்தூர் கும்பாபிஷேக நன்னீராட்டு விழா கழுகு பார்வை புகைப்படம். *SHARE IT*
News July 6, 2025
திருச்செந்தூர் முருக பக்தர்களே இச்செய்தி உங்களுக்குத்தான்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (ஜூலை 7) காலை 6:15 – 6:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த புனித நீர் ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். அதன்பிறகு 8000 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 400 கும்பங்களுடன் பூஜைகள் நடைபெறுகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்படும். 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்.
News July 6, 2025
தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜூலை 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்று, காலை 8.30 – 3 மணி வரை St. மரியன்னை கல்லூரியில் நடைபெறு கிறது. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இம்முகாமில் பங்குபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் இந்த <