News April 19, 2025
பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 12, 2025
பொட்டலூரணியில் 548-வது நாளாக தொடரும் போராட்டம்..

பொட்டலூரணியை சுற்றியுள்ள மூன்று தனியார் கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூடக்கோரியும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் இன்று (12.11.2025) தொடர் போராட்டத்தின் 548-ஆம் நாள் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது..
தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொட்டலூரணி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
News November 12, 2025
BREAKING தூத்துக்குடி: 11 மாத குழந்தை பலி

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் உள்ள செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் ராதா & மகேஸ்வரி தம்பதிகள். இன்று இவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த இவர்களின் 11 மாத பெண் குழந்தை பலியானார். தாய் ராதா மகேஸ்வரி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 12, 2025
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு

தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகளுக்கு மாவட்ட வாரியாக அரசு பரிசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தூத்துக்குடி மாவட்ட சிறந்த பள்ளியாக தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளி, டுவிபுரம் திருமண்டல நடுநிலைப்பள்ளி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


