News April 21, 2025
பூசாரி கொலை – கொத்தனார் கைது!

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
புதுவை: உங்க பட்டாவில் வில்லங்கம் இருக்கா?

பட்டா மாற்றம் செய்த பிறகு வில்லங்கம் வராமல் இருக்க இதனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் VAO அலுவலகத்தில் FMT வரைபடத்தில் உங்கள் பெயரில் மாறிய பட்டாவின் சர்வே என்னை Update செய்ய வேண்டும், VAO அலுவலகங்களில் பதிவேட்டில் உங்கள் பெயரை சரியாக அப்டேட் செய்ய வேண்டும். சிட்டாவில் உங்கள் பெயர் மற்றும் சர்வே எண் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை VAO அலுவலகங்களில் நேரில் சென்று சரிபார்க்க வேண்டும். SHARE IT NOW
News December 25, 2025
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு (அரியர்) மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஜனவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
புதுச்சேரி: நிவாரண உதவி பெற புதிய திட்டம்!

புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிக்கு, உடனுக்குடன் விண்ணப்பிக்க ஏதுவாக பேரிடர் நிவாரண உதவி சேவை என்ற இணைய வழி சேவையை துவங்கியுள்ளது. பி.எஸ்.டி.எம்.ஏ இணையதளமானது (<


