News October 23, 2024
புவியியல் & சுரங்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் இயற்கை வளங்கள் துறை செயலாளர் கே. பனீந்திர ரெட்டி தலைமையிலும், தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 14, 2025
திருவண்ணாமலைக்கு பெருமை சேர்த்த பாடலாசிரியர் விவேகா

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் பிறந்த பாடலாசிரியர் விவேகாவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கவிஞர் ஆகும் கனவுடன் சென்னை சென்ற விவேகா, தமிழ் பாடல், இலக்கியத்தில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் விடாமுயற்சியுடன் உழைத்திற்கு கலைமாமணி விருது அவரை வந்து சேர்ந்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 14, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (அக்:13) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News October 13, 2025
திருவண்ணாமலை தீபத் திருவிழா நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3 அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள், ஊர்வலங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட விவரங்கள் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.