News June 25, 2024
புவனகிரி: திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

புவனகிரி பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும் சின்னசேலத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் கடந்த 17.9.2023 திருமணம் நடந்தது. இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று சூர்யாவின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த செல்வகுமார், சூர்யாவின் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (25). இவர் பண்ருட்டி பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் தவறான முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரதீஷ் குமாரிடம் சிறுமி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பிரதீஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.
News November 22, 2025
கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கடலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, லால்பேட்டை 49 மி.மீ, குறிஞ்சிப்பாடி 44 மி.மீ, பண்ருட்டி 35 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 27 மி.மீ, வடக்குத்து 26 மி.மீ, வேப்பூர் 18 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, கடலூரில் 13 மி.மீ என மாவட்டம் முழுவதும் 439.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை பதிவாகியுள்ளது.


