News August 15, 2024
புவனகிரி டிரைவரை கடத்தியவர் கைது

ராமநத்தத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர்(40) சவாரிக்கு உளுந்தூர்பேட்டை சென்றார். இந்நிலையில் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், கணவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கடத்திய உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டையைச் சேர்ந்த நூர்கான் என்பவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 12, 2025
முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு!

கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் , அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற டிச.17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே இதில் கலந்து கொண்டு பயன்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
கடலூரில் நாளை குறைதீர் முகாம் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர், புவனகிரி ஆகிய தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம், நாளை(டிச.13) நடைபெற உள்ளது. இம்முகாமானது வட்ட வழங்கல் அலுவலர் அல்லது நுகர்வோர் குறைதீர்வு அலுவலர் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
கடலூர்: இந்த APP உங்கள் போனில் உள்ளதா?

அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.


