News March 18, 2024
புழல் சிறையில் போக்சோ குற்றவாளி உயிரிழப்பு

ஈரோடைச் சேர்ந்த அய்யாவு, (வயது 79) போக்சோ வழக்கில் கைதாகி கடந்த மாதம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அய்யாவுக்கு திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News August 31, 2025
திருவள்ளூர்: தீரவே தீராத கடனும் தீர்ந்து போகும்

திருவள்ளூர், பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரத்தில் சக்திவாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மூலவர் ஏழரை அடி உயரத்தில் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால் மட்டும் போதும், தீரவே தீராத எப்பேற்பட்ட கடனும் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. *கடனில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு பகிரவும்*
News August 31, 2025
முதலமைச்சர் கோப்பை போட்டிகள்: திருத்தப்பட்ட தேதி அறிவிப்பு.

திருவள்ளூர் மாவட்டத்தில், நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட தேதி, மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கையுந்துபந்து, கால்பந்து போட்டிகள் செப்.2 , மேசைப்பந்து, கையுந்துபந்து போட்டிகள் செப்.4, தடகளம், இறகுப்பந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செப்.9 மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
திருவள்ளூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த <