News March 25, 2025
புளியமரத்தில் பைக் மோதி விவசாயி பலி

கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
Similar News
News November 25, 2025
தருமபுரி வழியாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து

பெங்களூர் எஸ்வந்த்பூர் மெஜஸ்டிக் வழித்தடத்தில் இருந்து பானாச்வடி, கார்மிலாரம், ஓசூர், தர்மபுரி செல்லும் அனைத்து ரயில்களும் 25/11/2025 இன்று ஒரு நாள் மட்டும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் Kr புரம், ஜோலார்பேட்டை, சேலம் வழியாக செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 25, 2025
தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. தருமபுரி மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 04.12.2025 வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 25 நாட்கள் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. எனவே பள்ளி படிப்பை முடித்த 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று பயனடையலாம்.
News November 25, 2025
தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


