News November 18, 2024

புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

image

திருச்சி மாவட்டம் பச்சபெருமாள் பட்டி அடுத்துள்ள பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை  சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. கொல்லிமலையில் உற்பத்தியாகும் நீர் இப்பகுதியில் சமதள பரப்பில் ஓடுவதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து நீராடி செல்கின்றனர். தொடர் மழைக்காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிப்பதற்கு இன்று 2வது நாளாக தடை விதித்துள்ளனர்.

Similar News

News November 19, 2024

திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் வெற்றி தான்: அமைச்சர் பேச்சு

image

திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.என். நேரு இன்று பேசியது, தமிழக முதல்வர் மீதும், இந்த ஆட்சி மீதும் குறை சொல்லி அடுத்து நாங்க தான் என எதிர் கட்சி தலைவர்கள், அதிமுகவினர் நிறைய பேர் பேசுகின்றனர். ஆனால், தமிழக முதல்வராக ஸ்டாலின் தான் வருவார். இன்று யார்! யாரோ? நம்மை வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திருச்சியில் இருந்து ஆரம்பித்தால் எதுவுமே வெற்றி தான் என்றார்.

News November 19, 2024

வருத்தம் தெரிவித்த முன்னாள் அமைச்சர்

image

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கள ஆய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தங்கமணி அதிமுக நிர்வாகிகள் பொறுமையாக இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது எனவும், இதனால் தான் நாம் வெற்றியை இழந்து விட்டோம் என தெரிவித்தார்.

News November 19, 2024

திருச்சியில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

image

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர் கூட்டம் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.