News April 5, 2025
புலி போல சாதித்த எலி!

கம்போடியாவில் ஒரு எலி உலக சாதனை படைத்திருக்கிறதாம். அதுவும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கொடுத்து மனிதர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறதாம். ஆப்ரிக்கன் எலியான அதன் பெயர் ரோனின். கம்போடியா ராணுவத்தில் கடந்த 2021 முதல் பணியாற்றி வருகிறது. தற்போது வரை 109 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து அகற்ற உதவி இருக்கிறது ரோனின். சாதிக்க பிறந்த எலி!
Similar News
News December 10, 2025
விருதுநகர்: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

விருதுநகர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 10, 2025
210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்: EPS

திமுக தலைவர்கள் அதிமுகவை விமர்சிப்பது கேலிக்கூத்தாக உள்ளது என EPS கூறியுள்ளார். பல தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுகவை பற்றி தெரியாமல் CM பேசுவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என சூளுரைத்தார். மேலும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பற்றி மட்டுமே விமர்சிக்க முடியுமே தவிர, தங்கள் ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
நீட்டை ரத்து செய்யாததை கண்டித்து அதிமுக தீர்மானம்

அதிமுக கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤பேரிடர்களின் போது மக்களை பாதுகாப்பதில் தோல்வியடையும் TN அரசுக்கு கண்டனம் ➤அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆமை வேகம் காட்டுவதாக கண்டனம் ➤கோதாவரி-காவிரி இணைப்பில் அக்கறை இல்லை என கண்டனம் ➤நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு மானியம் ஆகிய வாக்குறுதிகளை காப்பாற்றாததற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


