News March 28, 2025
புலி தாக்கி உயிரிழப்பு: 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.
Similar News
News November 23, 2025
நீலகிரி: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 23, 2025
நீலகிரி: ரேஷன் கடை மீது புகார் இருக்கா? ஒரே CALL

நீலகிரி மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News November 23, 2025
நீலகிரி: தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஆடா சோலை பகுதியில், தோட்ட தொழிலாளர்களை ஏற்றி சென்ற மகேந்திரா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. விவசாய பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தோட்டத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 13 தோட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.


