News August 8, 2024

புலிப்பாக்கத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

image

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கொளவாய் ரூ.60 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தி, நடைபாதைகள் அமைக்கப்பட உள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 14, 2025

செங்கல்பட்டு: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

News November 14, 2025

செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

செங்கல்பட்டு: வாடகை வீட்டில் பாலியல் தொழில்!

image

தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட மணிமங்கலம், வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மசாஜ் சென்டர் பெயரில், பாலியல் தொழில் நடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்ததில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதிபடுத்தினர். 3 பெண்களை மீட்டு, பாலியல் தொழில் நடத்தி வந்த பிரசாந், சபரீஷை போலீஸ் கைது செய்தனர்.

error: Content is protected !!