News August 4, 2024

புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட பரிசோதனை – ஆட்சியர் அறிவிப்பு

image

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனைகள் செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. 30 வயதுக்கு மேலான பெண்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட பரிசோதனை மேற்கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

குமரியில் மனைவி, மாமியார் மீது தாக்குதல்

image

திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. கணவருடன் விவாகரத்து பெற்று பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் நித்யாவுக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் பழக்கமாகி குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்பு சுரேஷின் செல்போனில் விவாகரத்தான பல பெண்களை குறிவைத்து Instagramல் பேசியுள்ளார். இதுபற்றி கேட்ட நித்யா (ம)அவரது தாயரை தாக்கிய சுரேஷ் அவரது தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு.

News December 12, 2025

நாகர்கோவில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை

image

ஜம்முதாவிலிருந்து இன்று (டிச.12) அதிகாலை ஒரு மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இரண்டு பைகள் அனாதையாக கிடந்தது. அதனை ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனை செய்த போது அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News December 12, 2025

குமரி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் இதை தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!