News March 24, 2025
புருஷோத்தம பெருமாள் கோவிலில் நாளை திருவிளக்கு பூஜை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற புருஷோத்தம பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை (மார்ச்.25 ) பங்குனி திருவோணத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு திருமஞ்சனம் திருவாராதனை, மாலை 5 மணிக்கு தீபத்திருவிளக்கு பூஜை நடைபெறு உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
நெல்லையில் கனமழை தொடரும்.!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (நவ.22) மற்றும் நாளை (நவ.23) ஆகிய தினங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 22, 2025
நெல்லை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

திருநெல்வேலி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News November 22, 2025
நெல்லை: விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

விகேபுரம் அருகே காக்காநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் அங்குள்ள யூனியன் கவுன்சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துக்குமார் உயிரிழந்தார். இது குறித்து விகே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


