News August 24, 2024
புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

” ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருதை (PMRBP) மத்திய அரசு வழங்கி வருகிறது. 2025ஆம் ஆண்டிற்கான விருது பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரைப்படி 31.08.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு குமரி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 30, 2025
குமரி: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

குமரியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருப்போருக்கு SHARE பண்ணுங்க
News October 30, 2025
குமரி: இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

நேசமணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் (58). அக்.24-ந் தேதி இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராஜனிடம் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திடீரென உடல்நலக்குறைவால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் தேறியதை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
News October 30, 2025
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

குமரி ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தவறான கருத்துக்களை பொதுமக்களிடம் பரப்பி வருகிறார்கள். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது தவறான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


