News August 24, 2024
புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் கைது

சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ரவி போக்சோவில் கைது செய்யப்பட்டார். வடசென்னை மாவட்ட அரசு குழந்தைகள் நல அலுவலர் தந்த புகாரின் பேரில், போலீசார் ரவியை இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவி, புதுச்சேரி மாநில புரட்சி பாரதத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 17, 2025
போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், SSC, RRB, TNPSC, TNUSRB, போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மின்ட் ஐடிஐ-யில் வரும் ஜனவரியில் நடை பெற உள்ளது. இதில் சேர விரும்புவோர் https://forms.gle/QyWHC7dUAk9iYkFt5 கூகுள் படிவத்தில் தங்களது விவரத்தினை பூர்த்தி செய்யுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
BREAKING: செம்பரப்பக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம்

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாகம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறிப்பாக குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ஏரியை ஒட்டி உள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக ஊருக்குள் வெள்ளம் புகுந்ததாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
News December 17, 2025
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


