News March 21, 2024
புரட்சி பாரதம் அவசர ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு

திருவள்ளூர், பூவிருந்தவல்லி அருகே உள்ள ஆண்டர்சன் பேட்டை பூவையார் திடலில் புரட்சி பாரதம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம், நாளை (மார்ச்22) காலை 10 மணி அளவில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 15, 2025
ஆவடி அருகே மனைவியை கொன்ற கணவன் தற்கொலை

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி ஷீலா. சரண்ராஜிக்கு மனைவியின் நடத்தியைில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டத்தில் சரண்ராஜ், கத்தியால் ஷீலா-வை குத்தியதில் உயிரிழந்தார். இதனையடுத்து சரண்ராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 15, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

நாடு முழுதும் வரும் அக்.20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் https://www.inesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் மு. பிரதாப் அறிவித்துள்ளார். மேலும் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
News September 14, 2025
ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

ஆவடியில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.