News February 24, 2025
புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக அன்னதானம்

அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார். இதில் கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Similar News
News April 21, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில், திருச்சி – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி பல்வேறு பணிகள் காரணமாக ஏப்ரல்.22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 21, 2025
10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்
News April 21, 2025
உறையூர் குடிநீர் விவகாரம் – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.21) அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு என்பது ஆதாரமற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப மருத்துவரே சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மேலும், சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.