News December 5, 2024

புயல் பாதிக்கப்பட்ட 154 கிராமங்களுக்கு மின்விநியோகம்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 129 மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த 1,843 பணியாளர்கள் மூலம் 129 மின்கம்பங்கள் நடப்பட்டும், 2802 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பிகள் சீர்செய்யப்பட்டும் 154 கிராமங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 13, 2025

கடலூர்: பஸ் மோதி பரிதாப பலி

image

பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவ.5-ம் தேதி, சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நபர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 13, 2025

கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

image

பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்செல்வன் (34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழ்செல்வன் நேற்று தன்னுடைய வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 13, 2025

கடலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!