News March 19, 2024

புனித சூசையப்பர் திருவிழா

image

ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை பங்கு ஆலயத்தில் புனித சூசையப்பர் திருவிழா திருப்பலி பங்குதந்தை, உதவி பங்குதந்தையால் நிறைவேற்றப்பட்டது. இத்திருவிழா திருப்பலியில் அருட்தந்தை புனி சூசையப்பர் பெயர் கொண்ட அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். பிறகு ஆலயமணி ஓசையோடுயும், மேள, தாள முழக்கங்களுடன் இறைமக்கள் பக்தியோடும் இருகரம் குவிக்க புனித சூசையப்பர் திருகொடியிரக்கப்பட்டது .

Similar News

News October 27, 2025

அரியலூர்: புகையிலை விற்றவர் கைது

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முத்துசேர்வாமடத்தை சேர்ந்த ஐயப்பன் (39) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து 2.700 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News October 27, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.26) இரவு 10 மணி முதல் இன்று (அக்.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 26, 2025

ஜெயங்கொண்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகின்ற அக்.28ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் மின் நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!