News October 23, 2024
புத்துயிர் பெறுமா பவானி புதிய பஸ் நிலையம் ?

பவானி நகராட்சியில் மேட்டூர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. பஸ் நிலையம் கட்டப்பட்டு 35 வருடங்களுக்கு மேலாவதால் கட்டுமானங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனவே, அனைத்து வசதிகளுடன் பவானி புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Similar News
News November 12, 2025
ஈரோடு: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

ஈரோடு மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 12, 2025
சென்னிமலை அருகே பள்ளி மாணவன் விபரீத செயல்

சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி, ஒட்டங்காடு கோபால்-திவ்யா தம்பதியின் மகன், கெளரிஸ் (12) தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு கட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 10 நிமிடம் கழித்து சிறுவனின் அம்மா வீட்டுக்கு பின்புறம் உள்ள கட்டுத்தரைக்கு சென்று பார்த்தபோது வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 12, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (11.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம்-1930 மற்றும் குழந்தைகள் உதவி-1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


