News January 1, 2025
புத்தாண்டு கொண்டாட தொடங்கிய ஈரோடு மக்கள்

நள்ளிரவு 12 மணிக்கு 2024 ஆம் ஆண்டு விடைபெற்று, 2025 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. கடந்த ஆண்டுக்கு பிரிவு உபசாரம் நடத்தி, புதிய ஆண்டை வரவேற்க, ஈரோடு மக்கள் தயாராகி விட்டனர். அதன் பிரதிபலிப்பாக, பன்னீர்செல்வம் பூங்கா நினைவு தேவாலயம் முன்பு, ஏராளமானவர்கள் கூடி நிற்கின்றனர். இனிய புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இரவு 10 மணியில் இருந்தே, பட்டாசு வெடிக்க மக்கள் தொடங்கிவிட்டனர்.
Similar News
News November 26, 2025
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு: சிறுமி பாலியல் வழக்கில் 40 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை மாவட்டம் கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம் (எ) கரடி செல்வம் ஈரோடு மொடக்குறிச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததோடு கர்ப்பமாக்கினார். இந்த வழக்கில் ஈரோடு மகிலா நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி கரடி செல்வத்திற்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.