News January 2, 2025
புத்தாண்டில் விதிமீறல்! 500-க்கும் மேற்பட்ட வழக்குகள்!

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பைக் ரேஸ் போன்ற சம்பவங்களிலும், வாகன விதி மீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
கோவில்பட்டி: பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை

கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி அம்மாள்(25). இவரை இவரது பக்கத்து வீட்டுக்காரரான மகாராஜன் மது போதையில் வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு மக்கள் ஓடி வரவே மகாராஜன் தனது வீட்டுக்குள் புகுந்து பூச்சி மருந்து அருந்தியுள்ளார். இசக்கியம்மாளும், மகாராஜனும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மகாராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 19, 2026
தூத்துக்குடி: பன்றி தாக்கியதில் 2 பேர் காயம்?

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கரில் மானாவரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காசோளம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் சுமார் 8 மணி அளவில் அயன்ராஜாபட்டி பகுதியில் விவசாயிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் லட்சுமி மற்றும் மூர்த்தி ஆகியோரை பன்றிகள் தாக்கியதாகவும், இதில் இருவரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
News February 19, 2026
தூத்துக்குடியில் ரமலான் நோன்பு துவக்கம் – அறிவிப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு ஹாஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜபூர் ரகுமான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ரமலான் மாத முதல் பிறை தென்பட்டது. இதனையடுத்து நாளை (பிப்.19) முதல் புனித ரமலான் முதல் நோன்பு துவங்க உள்ளதாகவும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்தும், தொழுகைகளிலும் கலந்து கொண்டு புனித அருள் பெறவும் அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


