News January 2, 2025
புத்தாண்டில் விதிமீறல்! 500-க்கும் மேற்பட்ட வழக்குகள்!

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பைக் ரேஸ் போன்ற சம்பவங்களிலும், வாகன விதி மீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன விதிமீறல்களில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
தூத்துக்குடி: மக்களே கவனம்.. ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி அருகே உள்ள உப்பாற்று ஓடையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்திற்கு இன்று காலை 5.45 மணி நிலவரப்படி 1000 கன.அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், குளத்தின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே, கோரம்பள்ளம் குளம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 18, 2025
முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் – தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளுடன் அடையாள அட்டை தொலைபேசி குறியீட்டுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 18, 2025
தூத்துக்குடியில் இன்று ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.