News January 2, 2025

புத்தாண்டில் பிறந்த 8 குழந்தைகள்

image

திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக  அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புத்தாண்டாடில் 8 குழந்தைகள் பிறந்ததாக அரசு மருத்துவமனை அலுவலர் தெரிவித்தார்.

Similar News

News January 8, 2025

திருப்பத்தூர் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (07.01.2025) பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் சத்துணவு சாப்பிட்ட பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், சுற்றுசுவர், கழிப்பறை இல்லாத பள்ளிகள் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

News January 7, 2025

ஆம்பூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரோட்டரி கிளப் ஆப் ஆம்பூர் நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஜன.11 ஆம் தேதி ஆம்பூர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 2,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 8825662644, 8754542234, 9840674222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 7, 2025

வாணியம்பாடி அருகே பல்லவ கால நடுக்கல் கண்டெடுப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஜவகர் பாபு தலைமையிலான தொல்லியல்துறையினர் இன்று (07.01.2025) கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்லவர் கால நரசிம்ம வர்மனுக்கும், சாளுக்கிய மன்னனுக்கு இடையே நடைப்பெற்ற போரில் உயிர்நீத்தவர்களுக்கு வைக்கப்பட்ட நடுக்கல்லை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர்.