News August 17, 2024

புத்தகத் திருவிழாவில் வினாடி வினா போட்டிகள்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டிகள் நாளை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளராக இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 11, 2025

மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.

News August 11, 2025

விருதுநகர்: பனை சாகுபடி செய்ய விண்ணப்பிக்கலாம்

image

(ஆகஸ்ட்.11) விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் நிதியாண்டில் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்திற்கு ரூ.6.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் பனை மரத்தை நடவு செய்ய தோட்டக்கலைத்துறை மூலம் 40,000 பனை விதைகள் விநியோகம் செய்ய ரூ.1.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.

News August 11, 2025

விருதுநகர்: பஸ்ல உங்க Luggage-யை மறந்துடீங்களா?

image

விருதுநகர் மக்களே, Govt பஸ்ல பயணிக்கும் போது உங்க Luggage-ஐ பஸ்லயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டால் கவலைப்பட வேண்டாம். நீங்க வாங்கிய டிக்கெட்டில் இருக்கும் அந்த பேருந்து எண், விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்று கூறினால் போதும். நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்று கூறுவார். இந்த நம்பர உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!