News February 18, 2025
புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி ஆய்வு

நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. மார்ச் 1ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அரங்குகளை நேற்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த புத்தகக் கண்காட்சியில் 1 லட்சம் புத்தகங்கள் வரை இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 25, 2025
குமரி : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

குமரி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
குமரியில் காலை 8 மணிக்கு இங்கெல்லாம் கரண்ட் கட்!

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (அக். 25) நடைபெற உள்ளது. எனவே காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவே உங்க பணிகளை வேகமாக 8 மணிக்குள்ள முடிங்க…SHARE!
News October 24, 2025
குமரியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது எப்படி?

நாகர்கோவில் ஆயுதப்படை சாலையில் அருள்ஜீவன் என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து குட்கா கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் பேரில் எஸ்.ஐ. ஜெஸி மேனகா கேரளா சென்று குடோனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா, 2 கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


