News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News July 6, 2025
காரைக்கால் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து, தீ விபத்து குறித்து நகர காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 5, 2025
புதுவை ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் உங்களுக்கு தெரியுமா?

சுற்றுலா தலங்களில் ஒன்றான புதுச்சேரிக்கு, ஒரு சில பிரத்யேக உணவுகள் உள்ளது. புதுவை சுற்றுலா சென்றால் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா? பைனாப்பிள் ஷீரா, கேரளா போல புதுவையில் வைத்து செய்யப்படும் தேங்காய் லட்டு, பிரெஞ்ச் உணவான பிரெஞ்சு பேஸ்ட்ரி, மிக பேமஷான பழங்கள் ஐஸ்கிரீம், கடற்கரையை கலக்கும் வாழைப்பழ பஜ்ஜி, கல்கண்டு பொங்கள். இந்த ஸ்விட்ஸ்-ஐ அனைவரும் சுவைத்து மகிழ ஷேர் பண்ணுங்க!
News July 5, 2025
புதுச்சேரி-திருச்செந்தூர் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மைத் துறை சார்பில் நேற்று (ஜூலை 4) முதல் திருச்செந்தூருக்கு தொடர்ச்சியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குநரகம் அறிவித்துள்ளது.