News April 11, 2025
புதுவை PRTC ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி.யில் 276 ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். நேற்று போக்குவரத்துதுறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ நேரு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
Similar News
News December 22, 2025
புதுவை: “சைக்கிள் ஓட்டினால் மனநிலை மாறும்”

புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்த ‘பிட் இந்தியா’ சைக்கிள் பேரணியில், புதுப்பிக்கப்பட்ட ‘பிட் இந்தியா’ மொபைல் செயலியை, அறிமுகம் செய்து வைத்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசும் பொழுது, “வாரம் ஒரு நாள் சைக்கிள் ஓட்டுவதால் மனநிலை மாற்றுகிறது. வாழ்க்கையில் முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கிறது. கார்பன் உமிழ்வை சைக்கிள் பயணம் பெருமளவு குறைக்கிறது.” என கூறினார்.
News December 22, 2025
புதுவை: போலீஸ் அடித்தால் புகாரளிப்பது எப்படி?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது தகுந்த ஆதாரங்களுடன், <
News December 22, 2025
புதுவையில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிளம்பர் சஞ்சய்(21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(23) என்பவரும், நெல்லித்தோப்பு செங்கேணியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் பிளம்பிங் வேலை செய்ய நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது மதியம் விக்னேஷ் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று திரும்பிய போது, சஞ்சய் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


