News April 26, 2025

புதுவை: 3935 பேருக்கு அரசு வேலை

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படுமென TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News March 6, 2026

புதுச்சேரி: போக்சோ விரைவு நீதிமன்றம் அதிரடி!

image

புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சீனுவாசன் (55) என்பவருக்கு போக்சோ விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 6, 2026

புதுச்சேரி: சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

திருநள்ளாறில் இன்று நடைபெறும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம், திருநள்ளாறு, நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும் ரயில் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும் என்றும் மதியம் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

News March 5, 2026

புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கும் விழா

image

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலைரங்கத்தில், இன்று புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினர்.

error: Content is protected !!