News April 26, 2025

புதுவை: 3935 பேருக்கு அரசு வேலை

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படுமென TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News November 13, 2025

புதுவையில் 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

புதுவை போலீசில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி போக்குவரத்து (வடக்கு) பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு சைபர் கிரைமிற்கும், அங்கு பணியாற்றிய தியாகராஜன் கடலோர காவல்படை பிரிவிற்கும், கடலோர காவல் படை பிரிவில் பணியாற்றிய வேலயன் போக்குவரத்து (வடக்கு) பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்பி மோகன்குமார் வெளியிட்டார்.

News November 13, 2025

புதுவை: 3 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!

image

புதுவை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை செய்கின்றனர். இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவித்தால், 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News November 13, 2025

புதுச்சேரியில் இளைஞர் வெட்டி படுகொலை

image

புதுச்சேரி மாநிலம் சாரப் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், ரெயின்போ நகர் பகுதியில் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்பு யார் எதற்காக வெட்டினார்கள் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

error: Content is protected !!