News April 13, 2024
புதுவை: வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
புதுவையில் ஜன.15 வரை காலக்கெடு!

மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், “வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் 10,21,578 வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்த 9,18,111 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. 1,03,467 பேர் படிவங்களை திரும்ப தரவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ வரும் ஜன.15-க்குள் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
புதுவை: மீனவர்களின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆலோசனை

மீனவர்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, இயக்குநர் கிருஷ்ணன் தலைமையிலான வங்காள விரிகுடா நிறுவன நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். காரைக்கால் பொலிவுறு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துதல், புதுச்சேரி மீனவர்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
News December 17, 2025
புதுச்சேரிக்கு மழை எச்சரிக்கை

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் வரும் டிச.20 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க…


