News April 16, 2025
புதுவை: வங்கி அதிகாரி என கூறி 72 ஆயிரம் மோசடி

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது வங்கி கணக்கிற்கு பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு ஒரு லிங்க்கை அனுப்பி உள்ளார். அந்த லிங்க்கை வழியாக கார்த்திக் உள்ளே சென்றவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து 72,800 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
Similar News
News December 12, 2025
காரைக்காலில்: காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

காரைக்காலில் அனைத்து பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் கலந்தாய்வு கூட்டம், நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் கடைபிடிக்கவேண்டிய சாலை விதிகளை பற்றியும், பயணிகளின் பாதுகாப்பு பற்றியும், விபத்து நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி போலீசார் விரிவாக எடுத்துரைத்தனர்.
News December 12, 2025
புதுவை: மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் சோதனை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருந்தகத்தில் 6 பேர் கொண்ட புதுச்சேரி மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் பொதுமக்களுக்கு அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.