News April 16, 2025

புதுவை: மே.30 கடைசி நாள்

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றி தழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

புதுவை: அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி

image

திரு-பட்டினம் சதீஷ்குமார் என்ற மாதவராஜ். இவருக்கு இன்னும் திருமணமாக நிலையில், சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2025

புதுவை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க…

News December 6, 2025

புதுச்சேரியில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

image

புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “மாநில அரசு உரிமைகளை பறிக்க மத்திய அரசு விதை உரிமைச் சட்டம் – 2025 கொண்டு வந்துள்ளது. மின்சார திருத்த சட்டம் -2020 விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் கொண்டு வர மாட்டோம் என கூறிய மத்திய அரசு, மின்சார திருத்த சட்டம் 2025 கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு சட்டங்களை எதிர்த்து போராட்டம் விரைவில் நடைபெறும்.” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!