News October 25, 2024

புதுவை: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

புதுச்சேரி அரசு செயலர் பங்கஜ்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ஆம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

Similar News

News December 5, 2025

புதுவை: வெள்ள அபாய எச்சரிக்கை

image

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் டிசம்பர் 21-ம் தேதி அன்று மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று 5 குழந்தைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News December 5, 2025

புதுச்சேரி ராஜ் நிவாஸ் பெயர் மாற்றம்

image

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவின்படி நேற்று (டிசம்பர் 04) ‌புதுச்சேரி ‘ராஜ் நிவாஸ்’ மாளிகை ‘லோக் நிவாஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ் நிவாஸ் பெயர்ப் பலகையில் ‘லோக நிவாஸ்’ என்ற புதிய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரி ஆளுநர் மாளிகை ‘லோக் நிவாஸ்’ என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!